தாராபுரத்தில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தோல்வி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியுற்றார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியுற்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 59,804 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 16 லட்சத்து 44,085 பேர் மட்டுமே வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் 7 லட்சத்து 15,719 பேர் வாக்களிக்கவில்லை. மொத்தம் சராசரி- 69.67 % பேர் வாக்களித்திருக்கின்றனர்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

8 தொகுதிகளில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட தனபால் 116674 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆதித்தமிழர் பேரவை அதியமான் 65513 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.



திருப்பூர் வடக்கில், அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிட்டு 112766 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரவி என்கிற சுப்ரமணியம் 72364 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார்.

திருப்பூர் தெற்கில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் 74757 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட குணசேகரன் 70397 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் 126910 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இங்கு திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட முத்துரத்தினம் 94212 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.



உடுமலைப்பேட்டையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் 96893 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தென்னரசு 74998 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

மடத்துக்குளத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 84313 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் ஜெயராமகிருஷ்ணன் போட்டியிட்டு 77875 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 94197 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இங்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.ராமலிங்கம் 86866 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர தொகுதியான தாராபுரம் தொகுதியில், பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜிடம் தோல்வியடைந்தார்.



முன்னதாக 25 சுற்றில் ஒரு இயந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு இறுதி நிலவரம் வர காலதாமதம் ஆனது.

இதற்கிடையில், தாராபுரம் தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையையும், இயந்திர வாக்கு எண்ணிக்கையும் மீண்டும் நடத்த கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு இறுதி நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தபால் வாக்கு எண்ணிக்கையும் சேர்த்து திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 89986 வாக்குகளையும், எல். முருகன் 88593 வாக்குகளும் பெற்றுள்ளனர். 1393 வாக்குகள் வித்தியாசத்தில் எல். முருகன் தோல்வியடைந்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...