கோவை: கோவை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், கோவை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அம்மன் கே. அர்ஜுனன் வாக்கு எண்ண தொடங்கியதிலிருந்தே முன்னிலை வகித்து வந்தார். இவருக்கு அடுத்த நிலையில், திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், இறுதியாக 4810 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மன் கே. அர்ஜுனன் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 79 ஆயிரத்து 491 ஆகும். இரண்டாவது இடத்தைப் பிடித்த திமுக வேட்பாளர் வா ம சண்முகசுந்தரம் 74,681 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் அம்மன் கே. அர்ஜுனன் பெற்றுக்கொண்டார். உடன் இருந்த அதிமுகவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.