கோவை: கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பள்ளி சிறுவன் பொதுமக்களுக்கு மூலிகை செடிகளை இலவசமாக வழங்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த சிறுவன் ஷர்வேஷ், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வரும் இந்த சிறுவன் இன்று கோவை மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டார்.

மருத்துவ குணம் கொண்ட துளசி செடி, திருநீற்று பச்சிலை, கருந்துளசி, தூதுவளை செடி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செடிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். அவரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.