கிணத்துக்கடவு: இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா;  தடுப்பூசி தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றம்

கிணத்துக்கடவு: இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா;  தடுப்பூசி தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றம்


 கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால்,கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று

கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று வரை 475 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தொற்று அதிகரித்து வருவதால், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 510 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, இதுவரை பாதிக்கப்பட்ட 510 பேரில் 386 பேர் குணமடைந்து இருப்பதாகும், மீதமுள்ள 124 பேர் கோவை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவில் தடுப்பூசி பற்றாக்குறை..! 

மேலும், அரசு பரிந்துரையின்படி 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதால், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்கின்றனர். 

மக்கள் ஏமாற்றம். 

இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடவருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை, கிணத்துக்கடவு பகுதியில் வெறும் 3,982 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், தடுப்பூசி தட்டுப்பாட்டால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, நல்லட்டிபாளையம், சொக்கனூர்,வடசித்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிபோட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...