திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 40 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை!

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 40 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பல்லடம் தொகுதியில் 40 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

திருப்பூர் 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தும், எத்தனை சுற்றுகள் எண்ணப்படுகின்றன என்பதை பொறுத்தும் தேர்தல் முடிவுகள் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ முடிவுகள் வெளிவரும்.

திருப்பூரில் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் விவரம் வருமாறு;

தாராபுரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

காங்கேயம் தொகுதியில் 26 பேர் இருந்தபோதிலும் வேட்பாளர்கள் 26 என்பதால் வாக்கு எண்ணிக்கை 27 சுற்றுகளாக நடைபெறுகிறது.

அவினாசியில் 12 வேட்பாளர்களுக்கு 29 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில் 39 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கையானது 29 சுற்றுகளாக நடைபெறுகிறது.

பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இங்கு வாக்கு எண்ணிக்கை 40 சுற்றுகளாக நடைபெறுகிறது.

உடுமலைப்பேட்டையில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். வாக்கு எண்ணிக்கையானது 28 சுற்றுகள் நடைபெற உள்ளன. மடத்துக்குளம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர்.இங்கு 28 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...