பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து தேநீர் கடையின் உரிமையாளர் கிராமத்தினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை சுகாதாரத்துறையினர் கூறிவருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லி கவுண்டன் பாளையத்தை சேர்ந்த தவமணி, அதே ஊரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு தேநீர் அருந்த வரும் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் முக கவசம் அணிந்து வருமாறு கூறுகிறார்.

முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தனது தேநீர் கடைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள முன்னால் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்தார்.
அவரின் வித்தியாசமான விழிப்புணர்வு முயற்சி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. தேநீர் அருந்த வரும் அனைவரும், தலைவர்களின் சிலைகள் கூட முகக்கவசம் அணிந்திருக்கும் போது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முக கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்ந்துள்ளனர். முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். தலைவர்கள் சிலைக்கு முக கவசம் அணிவித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய தேநீர் கடை உரிமையாளர் தவமணியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.