இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து கோவை ஆட்சியர் அலுவலக ஜப்தி உத்தரவு ரத்து!

கோவை: கோவையில் வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.1.28 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.


கோவை: கோவையில் வீட்டு வசதி வாரியம் நிலம் கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.1.28 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்யும் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், பன்னிமடையைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாளுக்கு (90) சொந்தமான கோவை கணபதியில் உள்ள நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1983ல் கையகப்படுத்தியது. இதற்காக, ரூ.69 லட்சம் இழப்பீடு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட்டு, பல ஆண்டுகளாகியும், வீட்டு வசதி வாரியம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்தது.

இதனால் சரஸ்வதி அம்மாள் சார்பில், கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்யவும், கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைக்கவும், கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது.

அதேபோல், ஆவாரம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சரோஜினி ஆகியோருக்கும், ரூ. 59 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டும், பணம் செலுத்தப்படவில்லை. இதனால், கலெக்டர் அலுவலக பொருட்கள் ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த இரண்டு உத்தரவையடுத்து கோவை ஆட்சியர், சென்னை வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி இழப்பீட்டு தொகையை, நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கோவை வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், நில உரிமையாளர்கள் சரஸ்வதி அம்மாள், வெங்கடேஷ், சரோஜினி ஆகியோருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை மொத்தம், 1.28 கோடி ரூபாயை, காசோலையாக நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். இதனால், கோவை கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்வதற்கான உத்தரவை, நீதிபதி ரத்து செய்தார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...