கோவை அருகே கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: கோவை அருகே துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை அருகே துருப்பிடித்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை பொள்ளாச்சி ரோடு ஒத்தக்கால்மண்டபம் அடுத்த உப்பிலிபாளையம் சர்ச் தெரு பகுதியில் வசிப்பவர் இடையைச் சந்திரன். இவர் வீட்டின் அருகே மிகப் பழமையான மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.



மின் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து கீழே விழும் நிலையில் ஆடிக் கொண்டிருக்கிறது. மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியத்தினர் கண்டுகொள்ளவில்லை. உடனடியாக புதிய மின்கம்பம் அமைக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துருப்பிடித்த மின்கம்பம் கீழே விழுந்தால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் உப்பிலிபாளையம் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...