கோவை: கோவையில் ஐஓசி எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக சாலை ஓரங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
கோவை: கோவையில் ஐஓசி எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக சாலை ஓரங்களில் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மதுக்கரை-நீலம்பூர் பைபாஸ் சாலையில் ஐஓசி எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடங்களில் சாலை ஓரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய பொதுமக்கள், “சாலை ஓரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டு இப்பொழுது நுங்கு பனம்பழம் உட்பட பல்வேறு இயற்கை பொருட்களை வழங்குகின்றன.
கோவையை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் ஏழைகளின் வாழ்வாதாரமாக திகழக்கூடிய பனை மரங்கள் எரிவாயு குழாய் பதிப்பதற்காக வெட்டி அகற்றப்படுவது. மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பனை மரங்களை வெட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.