கோவை: கோவை சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20சதவீதம் அவசர கால கடனளிப்பு வழங்க வேண்டும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே வீ கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் (சீமா) தலைவர், கே வீ கார்த்திக் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது;
“கோவிட் முதல் அலை இருந்த பொழுது 2020-21 நிதியாண்டில் (முதல் காலாண்டில்) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20 சதவீதம் அவசரகால கடன் (ECLG SCHEME) வழங்கிய நரேந்திர மோடிக்கும், மத்திய நிதி அமைச்சர்,நிர்மலா சீதாராமனுக்கும் சீமாவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்பொழுது கோவிட்-19 இரண்டாம் அலை காரணத்தினால் தொழிற் சாலைகளின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மூலப் பொருட்களின் விலை உயர்வு சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ரொக்க கையிருப்பை பெருமளவில் குறைத்துள்ளது. இதனால் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு தவணை மற்றும் வட்டி திருப்பி செலுத்த மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன.
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை காக்க மற்றும் கோவிட் 19 இரண்டாம் அலை சரிவிலிருந்து மீள கீழ்காணும் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றவேண்டும்.
வங்கி கடன் மற்றும் கடன்களின் மீதான வட்டி திருப்பி செலுத்த கால அவகாசம் (Moratorium Period) டிசம்பர் 2022 வரை நீட்டித்து அறிவிக்கவேண்டும்.
கடந்த ஆண்டு அவசர கால கடனளிப்பு(ECLG SCHEME) திட்டத்தில் கடன் தொகை 40 சதவீதம் கேட்டிருந்தோம் ஆனால் 20 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. தற்பொழுது 20சதவீதம் அவசர கால கடனளிப்பு மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கினால் தற்பொழுது உள்ள சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும்.
மேலும் பயன்பாட்டில் உள்ள நடப்பு மூலதன கடன் மற்றும் கடன்களுக்கு திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும்மூன்று ஆண்டுகள் நீடிக்கவேண்டும் அதில் ஒரு வருடம் விடுமுறை காலமாக அறிவிக்கவேண்டும்.
வங்கிகளில் உள்ள திருப்பி செலுத்தாத கடன்களின் மீதான நடவடிக்கைகளை 31.03.2022 வரை நிறுத்திவைக்கவேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தவணை திருப்பி செலுத்த நிர்பந்திக்கின்றன.
இந்த பெரும் தொற்று காலங்களில், மத்திய நிதி அமைச்சர் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை காக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு சீமா தலைவர், கே வீ கார்த்திக் கூறியுள்ளார்.