கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வீசி வரும் நிலையில் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையம் செயல்பட்டு வந்த நிலையில் கூட்டத்தை தவிர்க்கும் வண்ணம் தடுப்பூசி மையம் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில் இதர நோயாளிகள் அங்கு அதிக அளவு வந்த வண்ணம் உள்ளதால் தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் செயல்பட்டு வந்த தடுப்பூசி மையம் இன்றிலிருந்து கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்படும். இனி வரும் நாட்களில் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி போடப்படும். கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படாது.
அரசு கல்லூரி வளாகத்தில் முதல் நாளான இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் மட்டும் போடப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் ஓய்வு எடுப்பதற்கு படுக்கை, தேவைபடுவோருக்கு ஆக்சிஜன் வசதி, வெளியில் அமர்ந்து கொள்ள மேசைகள் ஆகியவையும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.