வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை சரிவில் விழுந்து உயிரிழப்பு!

வால்பாறை: வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் உயிரிழந்தது.


வால்பாறை: வால்பாறையில் ஒரு வயதே ஆன பெண் குட்டியானை மலை சரிவில் விழுந்ததால் உயிரிழந்தது.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வால்பாறை அக்காமலை பில் மேடு வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.



அருகில் சென்று பார்த்ததில் குட்டி யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் ஆரோக்கிய சேவியர் தலைமையில் வால்பாறை சரகர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் தன்னார்வலர் கணேஷ் மற்றும் வனவர் முனியாண்டி கீர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



மலை சரிவில் இருந்து விழுந்ததில் குட்டியானை இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர். இறந்த பெண் யானைக்குட்டிக்கு ஒரு வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து குட்டி யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து வனவிலங்குகள் உண்பதற்காக உடல் விடப்பட்டது. வால்பாறை பகுதியில் மூன்று தினங்களில் இரண்டு யானைகள் இறந்து இருப்பது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...