கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்து மற்றும் இதர வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் உரிய முறையில் கடைபிடிக்க படுகிறதா என கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வீரப்ப கவுண்டனூர், சொக்கனூர், சிங்கையன்புதூர் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வீரப்பகவுண்டனூரில் ஒரு ஜீப்பில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 15க்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றி வந்தனர். வாகனத்தை நிறுத்தி வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர்.

அதேபோல் சிங்கையன்புதூர் பகுதியில் ஆட்டோ மற்றும் கார்களில் அதிக ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களுக்கும் வருவாய்த் துறையினர் அபராதம் விதித்தனர். இனி இது போல ஆட்களை அதிக அளவு ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.