திருப்பூர்: திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என திருப்பூர் தொகுதி எம்பி சுப்பராயன் குற்றம் சாட்டி உள்ளார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சுப்பராயன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளியை நேரில் சந்தித்து அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவமனையில் சமையல் கூடம், ஆக்சிஜன் மையம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தார்.

சமையல் கூடத்திற்கு அருகாமையிலேயே அதிக அளவு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவற்றை சுத்தம் செய்ய மாநகராட்சி ஆணையரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பராயன், “திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதல் சுற்று தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு இரண்டாவது சுற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள தற்போது இருப்பு இல்லை. இதனால், இரண்டாவது கட்ட தடுப்பூசி போடுவதற்கு பலர் தினந்தோறும் வந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் நாளை முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என வெற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு அதிக அளவில் இருக்கிறது. உடனடியாக சுத்தம் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளேன். திருப்பூர் மாவட்டம் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன்,” எனக் கூறினார்.