கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிணத்துக்கடவில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு நகரம், தேவனாம்பாளையம், அரசம்பாளையம், வடசித்தூர், முள்ளுப்பாடி, கோவிந்தாபுரம், நல்லட்டிபாளையம், சொலவம்பாளையம், மெட்டுவாவி, முள்ளுப்பாடி ஆகிய பகுதிகளில் 14 ஆண்களுக்கும், 9 பெண்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இடத்தில் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கபடுவதோடு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.