கோவை: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கான கருவியை தயாரிக்கும் கோவை தனியார் தொழில் நிறுவனத்தால் தமிழகத்திற்கு பெருமை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பி எம் கேர்ஸ் நிதியின் வாயிலாக மத்திய ராணுவ மற்றும் ஆராய்ச்சி மைய(DRDO) ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் முதல் கட்டமாக 380 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளுக்கான கருவிகள் தயாரிக்கப்பட உள்ளன.
இதில் 332 ஆலைகளுக்கான கருவிகள் தயாரிக்கும் பணி பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 48 கருவிகள் தயாரிக்கும் பணி கோவையில் உள்ள 'ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் கருவி தயாரிக்கும் பணி தொழில் நகரமான கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழில் நிறுவனத்திற்கு கிடைத்திருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதுகுறித்து, கோவை, 'ட்ரைடென்ட் நியூமேடிக்ஸ்' பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர், நடராஜன் 'SimpliCity' நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

“கோவை மாவட்டம் சோமயம்பாளையத்தில் கடந்த 32 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வென்டிலேட்டர்களுக்கு வழங்கும் காற்றை சுத்திகரிப்பது, ரயில் இன்ஜினில் பிரேக் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான பணிகளுக்கு நாங்கள் தயாரிக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்து வருகிறோம். கொரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு உதவும் வகையில் மருத்துவ ஆக்சிஜன் ஆலைக்கான கருவி தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் ஆலை என்பது காற்றில் இருக்கக்கூடிய நைட்ரஜனை நீக்கி ஆக்சிஜன் தயாரிக்கும் கருவி ஆகும். மத்திய ராணுவ மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(DRDO)இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து அதை தேஜஸ்(Tejas fighter aircraft) என்ற போர் விமானத்தில் விமானி வானில் பறக்கும் பொழுது அவருக்கு ஆக்சிஜன் வழங்க பயன்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலிண்டர்களில் வழங்கப்படும் ஆக்ஸிஜன்களுக்கு மாற்றாக 300, 400 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனைகளில் கருவியைப் பயன்படுத்தி அதிக நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தடையின்றி கிடைக்க வழி செய்ய முடியும். மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்த பெரிய கருவிகளைதயாரிக்கும் பணி இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதில் எங்கள் நிறுவனமும் ஒன்று. எங்களுக்கு 48 மெஷின்களை தயாரிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டான ஒரு சூழ் நிலையில் மக்களுக்கு உதவும் வகையில் மெஷின்களை தயாரிக்கும் பணி ஆணை கிடைத்துள்ளது. அந்த உணர்வை விவரிக்க வார்த்தை இல்லை."இவ்வாறு அவர் கூறினார்.