கோவை: கிணத்துக்கடவு பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற 350 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 350 பேருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு நேரிட்டுள்ள பகுதிகளில் சுகாதார துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்றுத் தடுப்பு விதிமுறை மீறல்கள் குறித்து கிணத்துக்கடவு போலீசார், வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு போலீசார் கிணத்துக்கடவு பஸ் நிலையம், பேருந்து நிறுத்தம், சிக்கலாம்பாளையம், ஆர். எஸ்.ரோடு உள்ளிட்ட பல இடங்களில் காலை, மாலை நேரங்களில் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை முகக்கவசம் அணியாமல் சென்ற 350 பேரிடம் தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர். அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், முகக்கவசம் வழங்கிய போலீசார் அவசியம் முகக்கவசம் அணியும் படியும் மக்களிடம் அறிவுறுத்தினர்.
அதேபோல் வருவாய்த்துறை சார்பில் வருவாய் ஆய்வாளர் ராமராஜ் தலைமையில் கிணத்துக்கடவு, வடபுதூர், சிக்கலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. உத்தரவை மீறி செயல்பட்டதாக 3 கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர்.