கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முதலி பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (46), ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த பழனிச்சாமிக்கு நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மயக்கமுற்றார்.
இதையடுத்து அவரை போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.