பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்ய முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து இரண்டு தினங்கள் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. எனவே, கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் மதுவிலக்கு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில், மதுவிலக்கு போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் 25 அட்டைப் பெட்டிகளில், 1200 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த பொள்ளாச்சியை சேர்ந்த ஹரிஷ் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ரூ. 1.44 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தொடர் விடுமுறையை பயன்படுத்தி, மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மது பாட்டில்கள் கலால் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும், தொடர்ந்து பொள்ளாச்சியில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.