கொரோனா காலத்திலும் நெருக்கடி தரும் வங்கிகளை தடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கொடிசியா கோரிக்கை!

கோவை: கொரோனா இரண்டாவது அலையில் நெருக்கடி தரும் வங்கிகளை தடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கொடிசியா கோரிக்கை விடுதுள்ளது.


கோவை: கொரோனா இரண்டாவது அலையில் நெருக்கடி தரும் வங்கிகளை தடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு கொடிசியா கோரிக்கை விடுதுள்ளது.

இது குறித்து கொடிசியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமனுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளில் கூறப்பட்டுள்ளதாவது;

“சென்ற ஆண்டு கோவிட்‌ 19 பெருந்தொற்று பரவி பொருளாதார சிக்கல்‌ ஏற்பட்டபோது அவசர கடன் வரி உத்தரவாத (ECLGS) திட்டத்தின்கீழ்‌ 20% கடனுதவி வழங்கியதற்கு மத்திய நிதியமைச்சருக்கு கொடிசியா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்‌ 19 பெருந்தொற்று இரண்டாம்‌ அலையால்‌, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ முழுமையாக மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும்‌ 6 மாதங்களில்‌ உற்பத்தி சார்ந்த செயல்பாடுகள்‌ வெகுவாக குறைய வாய்ப்புகள்‌ உள்ளன.

இந்தியா முழுவதும்‌ சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளின்‌ உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட பல செயல்பாடுகளும்‌ கடமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, விற்பனையும்‌ நேரடியாக பாதிக்கப்பட்டு, நிதிப்‌ பற்றாக்குறைக்கு வழிவகுத்திருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சரியாக செலுத்த இயலாமல்‌ போவதற்கும்‌ இது காரணமாக அமைகிறது. மூலப்பொருட்கள் 70% வரை அசாதாரணமாக விலை உயர்ந்ததும் இந்த கடுமையான நிதி பற்றாக்‌ குறைக்கு காரணம்‌ ஆகும்‌.

மேற்சொன்ன காரணங்கள்‌ காரணமாக முன்பு அளிக்கப்பட்ட 20% கடன்‌ உதவி தொகையை முழுவதும்‌ காணாமல்‌ செய்துவிட்டன. அந்த வகையில்‌, இந்த இரண்டாம்‌ அலை நோய்ப்‌ பரவலில்‌ இருந்து விடுபட, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ பாதுகாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள்‌ செலுத்த வேண்டிய கடன்‌ தொகைகள்‌ மற்றும்‌ அதற்கான வட்டி தொகை ஆகியவற்றுக்கு 6 மாத கால கடன்‌ விடுப்புக்‌ காலம்‌ அளிக்கப்பட வேண்டும்‌.

தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில்‌ இருந்து மீளும்‌ வகையில்‌ தொழிற்சாலைகளுக்கு அவற்றின்‌ நடப்பு மூலதன கடன்‌ அல்லது ரொக்கக்‌ கடன்‌ வசதி ஆகியவற்றில்‌ கூடுதலாக 20% கடனுதவியை எந்த நிபந்தனையும்‌ இல்லாமல்‌ வங்கிகளும்‌, வங்கிசாரா நிதி நிறுவனங்களும்‌ வழங்க வேண்டும்‌. இரண்டு வருட கால கடன்‌ விடுப்பு காலத்திற்கு பிறகு இந்த கூடுதல்‌ கடன்‌ தொகையை திருப்பி செலுத்தும்‌ காலத்தை 6 ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்‌. தற்போது உள்ள சூழலை கவனத்தில்‌ கொண்டு இயங்காச்‌ சொத்து நடைமுறைகள்‌ குறித்த தளர்வுகள்‌ வரும்‌ 31.03.2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும்‌.

வங்கிகளிடமிருந்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள்‌ கடன்‌ தொகையைச்‌ செலுத்துமாறு கடுமையான அழுத்தம்‌ தரப்படுகிறது. இந்த சிக்கலான சூழ்நிலையில்‌ மத்திய நிதியமைச்சர்‌ தலையிட்டு சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழிற்சாலைகளுக்கு வங்கிகள்‌ அளிக்கும்‌ நெருக்கடியை தடுத்து உதவுமாறு பணிவுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.” இவ்வாறு கொடிசியா கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...