கோவையில் கொரோனா தொற்று பாதித்த 14 வீதிகள் ஒரு வாரம் அடைப்பு!

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதித்த 14 வீதிகள் ஒருவாரம் அடைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ கூறியுள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதித்த 14 வீதிகள் ஒருவாரம் அடைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ கூறியுள்ளார்.



கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ ஓம்சக்தி நகரில்‌ வீட்டு உரிமையாளர்கள்‌ மற்றும்‌ குடியிருப்போர்‌ நலச்சங்கத்தினருடன்‌ இணைந்து மாநகராட்சி சார்பில் ஆலேசானைக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ பேசிய மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌, “ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று பரவலை தடுப்பதற்காக கோவை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வடக்கு மண்டலம்‌ 41-வது வார்டுக்குட்பட்ட 14 வீதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கின்றனர். எனவே, இந்த வீதிகளில் இருந்து மற்ற வீதிகளுக்கும்‌ தொற்று பரவாமல்‌ தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.



கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 14 வீதிகளை ஓருவார காலத்துக்கு தடுப்புகள்‌ கொண்டு அடைத்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள்‌ தங்களின்‌ நோய்‌ தொற்று குறித்த சந்தேகங்களுக்கு மாநகராட்சியின்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ மருத்துவ முகாம்களில்‌ பரிசோதனை செய்து கொள்ளலாம்‌. பரிசோதனையில்‌ தொற்று அறிகுறி இருப்பின்‌ அவர்கள்‌ அருகில்‌ உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ அல்லது அரசு மருத்துவமனைகளில்‌ சிகிச்சை எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. லேசான தொற்று அறிகுறி உள்ளவர்கள்‌ அவாகளது வீடுகளில்‌ தங்களை தனிமைப்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. மேலும்‌, பொதுமக்கள்‌ அனைவரும்‌ கோவிட்‌ தடுப்பூசிகளை செலுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, கொரோனா நோய்‌ தொற்று பாதிக்கப்பட்டு நோயுடன்‌ வீடுகளில்‌ தனிமைப்படுத்திக்‌ கொண்டு இருப்பவர்கள்‌ வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்‌. முகக்கவசம்‌ கட்டாயம்‌ அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவிட வேண்டும்‌. வீதிகளில் தடுப்பு அமைத்தல்‌ மற்றும்‌ தடுப்பூசி போடுதல்‌ போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ மற்றும்‌ குடியிருப்போர் நலச்‌ சங்கங்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌,” என்று கூறினார்.



வடக்கு மண்டலம்‌ காந்தி மாநகரில் கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு செய்த பின்பு, கொரோனா தொற்று நடவடிக்கைகளை பின்பற்றும்படி மக்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌, குடியிருப்போர நலச்சங்க நிர்வாகிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...