கோவை: கோவையில் அஞ்சல் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அஞ்சல் துறை இயக்குனரகத்தில் இருந்து கடந்த 26ம் தேதி அனைத்துக் கோட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதில், “அனைத்து தபால் அலுவலக மையங்களும் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். தபால் சேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊழியர்கள் பணியில் இருப்பதை கோட்ட அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம். பணியாளர்கள், வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதி வழங்கப்படுகிறது,”என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், கோவை கோட்டத்தில் அஞ்சல் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, கோவை கோட்ட அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சரவணம்பட்டி துணை அஞ்சல் நிலையத்தில் 6 பேர், குமாரபாளையம் துணை அஞ்சல் நிலையத்தில் ஒருவர், அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே உள்ள துணை அஞ்சல் நிலையத்தில் ஒருவர் என தொடர்ந்து அஞ்சல் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை குட்ஷெட் சாலையில் பணிபுரிந்து வந்த அஞ்சலக எழுத்தர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். எனினும் அனைத்துத் தபால் நிலையங்களிலும், அனைத்து ஊழியா்களும் பணிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். குறைவான பணியாளர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்புகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அஞ்சல் துறை இயக்குநரகத்தின் சுற்றறிக்கையில் கூறியதுபோல, மற்ற கோட்டங்களில் வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை.இதனால், அஞ்சல் பணியாளர்கள் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அஞ்சல் துறை இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின்படி, கோவை அஞ்சல் கோட்ட அஞ்சல் நிலையங்களில் குறைவான பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.