மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக தபால் தலை வெளியிட திட்டம் என தகவல்!

கோவை: மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக தபால் தலை வெளியிட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் மறைந்த நடிகர் விவேக் நினைவாக தபால் தலை வெளியிட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக நகைச்சுவை நடிகர் விவேக் தன்னுடைய படங்களில் நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை கூறி வந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழிகாட்டுதலின்படி ஒரு கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டார். கிரீன் கலாம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பூமி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக்கொண்டு இதுவரை அவர் 35 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் திடீரென மரணம் அடைந்தார். இது திரை உலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராக நடிகர் விவேக் திகழ்ந்தார். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கிய நடிகர் விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விவேக் படம் போட்ட தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அடுத்த மாதம் முதல் வாரத்தில் தபால்தலை வெளியிடலாம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...