வால்பாறை: வால்பாறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை கூண்டில் பிடிபடாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகர் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. நாய், கோழி, ஆடு, பூனை போன்ற வீட்டில் வளர்க்கும் விலங்குகளை பிடித்து உண்பதற்காக சிறுத்தைகள் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றி வருகின்றன. குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டிவி கேமராவில் சிறுத்தைகள் நடமாடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இரவு நேரத்தில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை தற்செயலாக பார்க்க நேரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதை பார்க்கும் போது வால்பாறை பொதுமக்களிடம் அச்சம் அதிகரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதிகளில் இரவில் சிறுத்தை ஒன்று சுற்றி வருவது குறித்த வீடியோ வெளியானது. வாழைத்தோட்டம் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக சிறுத்தையை பிடிக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ஆரோக்கிய ஜேவியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வாழை தோட்டம் பகுதிகளில் சிறுத்தை நடமாடும் பகுதிகளில் நவீன கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி அந்த பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாடுவது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வால்பாறை புதிய பேருந்து குடியிருப்பு பகுதியில் இரண்டு கூடுகள் வைக்கப்பட்டுள்ளன.
13ம் தேதி அன்று வைக்கப்பட்ட கூண்டில் இதுவரை சிறுத்தை இன்னும் சிக்கவில்லை. நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளில் மீண்டும் சிறுத்தை சுற்றுவதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுக்குள் மாட்டிறைச்சி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெறும் கண்துடைப்புக்காக வனத்துறையினர் கூண்டு வைத்ததாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.