திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடும்பத் தகராறு காரணமாக ஒரு தாய், தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் எலி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு தானும் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது குப்புசாமி நாயுடுபுரம். இப்பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச் செல்வி. இவருக்கும் பிரபு என்பவருக்கும் திருமணமாகி பிருந்தா (வயது 7), பிரசந்தா (வயது 4) என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக கணவர் பிரபுவை பிரிந்து தமிழ்ச் செல்வி தனது குடும்பத்தாருடன் குப்புசாமி நாயுடுபுரத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் தமிழ்ச் செல்வியின் வீட்டார் பிரபுவுடன் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். இதற்கு தமிழ்ச் செல்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பெற்றோர்களின் வற்புறுத்தல் காரணமாக மனமுடைந்து நேற்று முன் தினம் தமிழரசி தனது இரு குழந்தைகளுக்கும் எலி மருந்தை கொடுத்துவிட்டு தானும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆனால், தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததால் நேற்று மறுபடியும் எலி மருந்தை அளவுக்கதிகமாகக் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டுள்ளார். இந்தநிலையில், பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளுடன் தமிழ்ச் செல்வியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட குடும்பத்தினர் விசாரித்தபோதுதான் எலி மருந்தை உட்கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து மூவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் பிருந்தா மற்றும் பிரசந்தா ஆகிய இரு குழந்தைகளும் ஒன்றன்பின் ஒன்றாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ்ச் செல்வி சிகிச்சை பெற்று வரும் நிலையில், பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தகராறில் ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.