நீலகிரி: உதகையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

கொரோனா தொற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ளசுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள், சுற்றுலா தலங்களில் கடை வைத்திருப்பவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளப் மகேந்திரா சார்பில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதகை சார் ஆட்சியர் மோனிகா ராணா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கிளப் மகேந்திரா நிறுவன மேலாளர்கள் இளையராஜா, விஜயகுமார், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்