பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிந்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு ஆனைமலை பெரிய பள்ளிவாசல் அருகே போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டெம்போவில் சோதனை செய்தனர். அதில் சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக, ஆனைமலை காந்தி நகரைச் சேர்ந்த ரபீக்(39), பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபீக்(29), ஆனைமலையைச் சேர்ந்த பகீப்புள்ளா(44) ஆகியோரைப் பிடித்து ஆனைமலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கடத்த முயற்சித்த சுமார் 4.5 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பொள்ளாச்சியில் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர்.