சோலார் பேனல் மோசடி வழக்கில் மலையாள நடிகை சரிதா நாயருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை… கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பு..!

கோவை: கேரளாவைச் சேர்ந்த மலையாளத் திரைப்பட நடிகை சரிதா நாயருக்கு, கோழிக்கோடு நீதிமன்றம், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.


கோவை: கேரளாவைச் சேர்ந்த மலையாளத் திரைப்பட நடிகை சரிதா நாயருக்கு, கோழிக்கோடு நீதிமன்றம், சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் சோலார் சிஸ்டம் என்ற பெயரில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் சோலார் பேனல் அமைக்கும் நிறுவனத்தை நடிகை சரிதா நாயர் நடத்தி வந்தார். கடந்த 2012 ல் கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர், போலீஸில் அளித்த புகாரில் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி, 42.70 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக சரிதா நாயர், அவரது கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் பெயரை கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை, கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், நீதிமன்றம் பலமுறை, 'சம்மன்' அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், அவரை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை சமீபத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வெளியானது, இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயருக்கு, ஆறு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதல் குற்றவாளி பிஜு ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...