வால்பாறை: வால்பாறையில் கோடை மழை பெய்ததன் காரணமாக தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது தேயிலைச் செடிகளுக்குத் தேவையான வெப்பமும் மழையும் ஒருசேர கிடைத்து வருவதால் வால்பாறையில் சம சீதோஷண நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் தேயிலைச் செடிகள் துளிர் விட்டு வளர்கின்றன. தேயிலை செடிகளில் அதிகப்படியான கொழுந்துகள்கிடைக்கின்றன.

இந்நிலையில் அதிகப்படியான கொழுந்துகள் கிடைப்பதால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொழுந்து பறித்தல் உரமிடுதல் மருந்து அடித்தல் போன்ற பணிகளில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்