கோவை போத்தனூரில் தந்தை, மகன் மற்றும் நண்பர் கூட்டுச் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். வாடிக்கையாளர்களின் புகாரைத் தொடர்ந்து போத்தனூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.
கோவை: கோவை போத்தனூரில் தந்தை, மகன் மற்றும் நண்பர் கூட்டுச் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். வாடிக்கையாளர்களின் புகாரைத் தொடர்ந்து போத்தனூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூரில் ரொனால்டு ரீகன் டேவிட் அவரது தந்தை டேவிட் சாமுவேல் இவர்களது நண்பர் ராஜேந்திரன் ஆகியோர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் பணம் வசூல் செய்தனர். குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அன்சாரி வயது 34, இவர்களது சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து ரூபாய் 5 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால், முதிர்வுத் தொகையை தராமல் சீட்டு நிறுவனத்தினர் காலம் கடத்தி வந்தனர்.
இந்தநிலையில், சீட்டு நிறுவனத்தை மூடிவிட்டு மூவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து போத்தனூர் போலீஸாரிடம் அன்சாரி புகார் செய்தார். விசாரணையில் 68 பேரிடம் ரூபாய் 70 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. மூன்று பேர் மீதும் கூட்டு சதி, ஏமாற்றுதல், தொழிலாளர் பாதுகாப்பு நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.