பொள்ளாச்சியில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது... சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு..!

பொள்ளாச்சியில் பல்வேறு வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டன.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்து மீட்கப்பட்டன.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் செல்லும் மர்மநபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதும், மற்றும் வீடுகளில் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரை அடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க கிழக்கு காவல் நிலைய போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.



இந்தநிலையில், நேற்று தெப்பக்குளம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் அவர்களிடம் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(25), பிரகாஷ்(22) மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சங்கரபரணி(37) உள்ளிட்ட அந்த மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தபோது, இவர்கள் பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...