நீலகிரி: கோத்தகிரி அருகே பெத்தளா கோயில் பிரச்சனையில் 3 வருடங்களுக்குப் பின் தீர்வு காணப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெத்தளா ஹெத்தை அம்மன் கோயில் கடந்த 3 வருடங்களாக பூசாரி தேர்ந்தெடுப்பதில் இருந்து வந்த பிரச்சினை, குன்னூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ் முன்னிலையில் புதன்கிழமை தீர்வு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற பெத்தளா ஹெத்தையம்மன் கோயில் பூசாரிகளில் 3 பேர் ஊர்மக்களை மதிக்காமல் கோயில் விதிமுறைகளுக்கு மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பூசாரிகளை மாற்ற வலியுறுத்தி இளிதுரை எடப்பள்ளி, பெட்டடி உள்ளிட்ட 18 கிராமத்தை சேர்ந்த 2500 படுகர் இன மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், முற்றுகையிட்டும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பூசாரிகளுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரு கோஷ்டிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், இரு பிரிவினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டது. அதன்படி இனி வரும் காலங்களில் ஊர் பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.