வால்பாறை அருகே மர்மமான முறையில் காட்டு யானை உயிரிழப்பு!

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வரட்டுப்பாறை எஸ்டேட் வனப்பகுதியில் அழுகிய நிலையில் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததாக எஸ்டேட் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து வால்பாறை வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ததில்பெண்யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

அந்த யானையின் வயது 25 க்கும் மேல் இருக்கும் என்பது தெரிய வந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். யானையின் உடல் அழுகி விட்டதால் எப்படி இறந்தது என்று தெரியவில்லை. வால்பாறை கால்நடை மருத்துவரை அழைத்து வந்து உடல் கூராய்வு செய்யப்பட்டது.

பின்னர், வனவிலங்குகள் உண்பதற்காக உடல் அப்படியே விடப்பட்டது காட்டு காட்டு நோய் தொற்றால் இறந்த தா அல்லது இயற்கையான முறையில் இறந்ததா என்று ஆய்வு செய்து வன விலங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...