கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலி!

கோவை: கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கும்போது தந்தை நீரில் மூழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் புதூரைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (43) நேற்று மாலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நீச்சல் செய்து கொண்டிருக்கும் போது திடீரென செந்தில்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் கிணற்றுக்குள் இருந்து சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து செந்தில் குமாரைகாப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செந்தில்குமார் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...