மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்!

ராமநாதபுரம்: மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.


ராமநாதபுரம்: மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்திய போலீஸ் அதிகாரியை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;

“ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கோவிட் 19 பணியில் வேலை செய்யும் மருத்துவர்களை காவல்துறை துணை கண்காணிப்பாளர் குடிபோதையில் மரியாதை இல்லாமல் பேசியுள்ளார். மேலும் போலீஸ் ஜீப்பை ஏற்றி அராஜகம் செய்துள்ளார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் இந்த செயலை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

உயிரை பணயம் வைத்து கொரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்களை கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாநிலம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக நாளை காலை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும். அப்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். அடுத்த கட்டம் குறித்து நாளை முடிவு செய்யப்படும்,” என கூறப்பட்டுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...