பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலையில் முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.120.55வரை ஏலம் விடப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாராந்திர கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இதில், ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கொப்பரை உற்பத்தி விவசாயிகள் பங்கேற்பர். அதன்படி நேற்று வாராந்திர கொப்பரை ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் நடந்தது.
இதில், ஆனைமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 138 விவசாயிகள் மொத்தம் 778 கொப்பரை தேங்காய் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தின் போது 8 வியாபாரிகள் பங்கேற்று ஏலம் கேட்டனர். 420 முதல் தர கொப்பரை மூட்டைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.110 முதல் ரூ.120.55வரை ஏலம் விடப்பட்டது.

358 இரண்டாம் தர கொப்பரை மூட்டைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.74 முதல் ரூ.105 வரை ஏலம் போனது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது நேற்றைய ஏலத்துக்கு விவசாயிகள் 4 கொப்பரை மூட்டைகள் குறைவாக கொண்டு வந்திருந்தனர். அதே போல முதல் தர கொப்பரை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.7.85 குறைவாக ஏலம் போனது.