கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் உரமாக மாற்றம்!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் திட்டம் மூலம் இதுவரை 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் உரமாக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன. இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டது. தனியார் அமைப்பின் வாயிலாக பயோ மைனிங் திட்டம் தினமும் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பயோ மைனிங் திட்டத்தின் முதல் கட்டத்தில் 9 லட்சம் கியூபிக் மீட்டர் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டத்தில் 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவுக்கு குப்பைகள் அழிக்கப்பட்டு உரமாக்கப்பட்டுள்ளன. இதில் பிளாஸ்டிக் பொருட்கள், கட்டிட கழிவுகளும் அடங்கும். திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து அண்ணா பல்கலைக்கழக குழுவினர் விரைவில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்,’’ என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...