கோவையில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை!

கோவை: கோவையில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவையில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 6ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி வருகிற மே 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணும் பணிகளுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளில்மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ள அலுவலர்களுக்கு நாளை கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் அலுவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மாற்றாக துணை தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,”வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வரும் 29-ம்தேதி கொரோனா தொற்றுப் பரிசோதனை எடுக்கப்படும்.

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒருவேளை தொற்று உறுதி செய்யப்பட்டால், மாற்று அலுவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக மாற்று அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் எவ்வித குழப்பமும் இன்றி வாக்கு எண்ணிக்கை உரிய முறையில் நடத்தப்பட உள்ளது” என்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...