கோவை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கோவை மாவட்டத்தில் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதால் பள்ளி வாரியாக பட்டியல் திரட்டப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் மட்டும் தினசரி பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து பொது போக்குவரத்து வசதி மூலம் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் ஒன்று கூடுவதால் கொரோனா பரவல் அதிகம் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது சார்ந்து ஆசிரியர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு வேடிக்கை பார்க்கிறது.
கோவை மாவட்டத்தில் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நிலவரத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய கலெக்டரும் கண் திறப்பதாக இல்லை. இந்தநிலையில், வரும் 30-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் இதிலிருந்து விலக்கு பெறுவோர் உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிவாரியாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்களின் விவரம் சமர்ப்பிக்க தலைமையாசிரியர்களுக்கு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.