திருப்பூரில் போலீஸ் வாகனத்தை திருடி லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்திய நபரால் பரபரப்பு!

திருப்பூர்: போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


திருப்பூர்: போலீசிடமிருந்து திருடிய வாகனத்தை லாரியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்தி விட்டு விசாரணைக்குச் சென்றதாகத் தெரிகிறது.

அப்போது அந்த போலீஸ் வாகனத்தை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் காவலர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊத்துக்குளி சாலையில் சென்றுள்ளார். கூலிபாளையம் அருகே நிலை தடுமாறி எதிரே வந்த லாரியில் போலீஸ் வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். லேசான காயம் அடைந்த அவருக்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நபரிடம் விசாரணை செய்தனர். அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (23) என்பது தெரியவந்தது.அவரிடம் மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...