கோவை: கோவை அருகே உள்ள வீர கேரளத்தில் நண்பனை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான இருவரை கைது செய்த போலீஸார், மேலும், சம்பந்தப்பட்ட மூன்று பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வீரகேரளம் டாஸ்மாக் மதுக்கடை அருகில் உள்ள மைதானத்தில் கடந்த 24-ஆம் தேதி மர்மமான முறையில் ஓர் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வடவள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் வீர கேரளத்தைச் சேர்ந்த தர்மலிங்கம்(45), பெயிண்டர் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கடந்த 24ஆம் தேதி தர்மலிங்கத்தின் நண்பனான முல்லை நகரைச் சேர்ந்த பிரபு(28) மற்றும் பேரூர் செட்டிபாளையம்தைச் சேர்ந்த முத்துக்குமார்(29), ஆகிய இருவரும் தர்மலிங்கத்தினை அழைத்துச் சென்றுள்ளனர். பிரபு மற்றும் முத்துக்குமார் பிடித்து விசாரித்ததில் 23ஆம் தேதி தர்மலிங்கம் அவரது நண்பர்களான பிரபு, முத்துக்குமார், காளி, ஜெயா, நந்தா ஆகியோர் சுகர் கேன் இன்ஸ்டியூட் அருகில் உள்ள வீட்டில் மது அருந்தியது தெரியவந்தது. சிறிது நேரம் கழித்து காளியிடம் இருந்த 3 கிராம் தங்கம் காணாமல் போனது. தர்மலிங்கம் அங்கிருந்து யாரிடமும் கூறாமல் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் அவர்தான் தங்கத்தை எடுத்துச் சென்று இருப்பார் என சந்தேகப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து மறுநாள் தர்மலிங்கத்தினை அழைத்துச் சென்று மது அருந்திய இடத்தில் வைத்து ஐந்து பேரும் இணைந்து தர்மலிங்கத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பின் 5 பேரும் தர்மலிங்கத்தை அழைத்துக்கொண்டு வீரகேரளம் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள மயானத்துக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது தர்மலிங்கம் உயிரிழந்துள்ளார். உடலை விட்டுவிட்டு ஐந்து பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.'' என்று தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் பிரபு மற்றும் முத்துக்குமாரை கைது செய்தனர் மேலும் மூவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.