கொரோனா தொற்று குறித்து கிணத்துக்கடவு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிணத்துக்கடவு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.

இதனால், ஒரே இடத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத்துறை வலியுறுத்தி இருந்தது. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் அறிவித்திருந்தார்.



அதன்படி, இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள பேரூராட்சி சமுதாயக் கூடத்திலும், இதைப்போல் காரச்சேரி பகுதியிலுள்ள மினி கிளினிக்கிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கிணத்துக்கடவு நகரப் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா, காய்ச்சல், சளி போன்றவைகள் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், காரச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், அங்குள்ள பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...