கோவையில் நகையை அடகு வைத்து, கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு 100 மின் விசிறிகளை வாங்கிக் கொடுத்த தம்பதி.

கோவையில் நகையை அடகு வைத்து, கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு 100 மின் விசிறிகளை வாங்கிக் கொடுத்த தம்பதி.


கோவை: தடுப்பூசி செலுத்த வந்த கோவையை சேர்ந்த ஒரு தம்பதியினர் கொரானோ நோயாளிகள்மின்விசிறி இல்லாமல் படும் கஷ்டத்தை பார்த்து தங்களுடைய நகைகளை அடமானம் வைத்து மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மின்விசிறிகளை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராம்நகர் பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் அதே பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.இவர்கள் சிங்காநல்லூர்இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி போட சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள நோயாளிகளின் மின்விசிறி இல்லாமல் படும் கஷ்டத்தை பார்த்து தங்களுடைய நகைகளை இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து நூறு மின்விசிறிகளை வாங்கிவந்து இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ரவீந்திரநிடம் வழங்கினார்கள். 

ஆனால், இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வரோ, இவ்வளவு மின்விசிறிகள் வேண்டாம், பாதியை எடுத்துக் கொண்டு உங்களுடைய நகைகளை மீட்டு கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். ஆனாலும், நோயாளிகளுக்காக வாங்கி வந்தது இதை திரும்ப எடுத்துச் செல்ல மாட்டோம் என்று அந்த தம்பதி கூறியுள்ளனர். மேலும், அவர்கள் பெயர் விவரங்களையும் கூற மறுத்துவிட்டார்கள். 

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர். இதை தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த அனைத்து மின்விசிறிகளையும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு நோயாளிகளுக்காக கொடுத்து விட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...