உடுமலை அந்தியூரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: உடுமலை அந்தியூரில் இரண்டு வாரங்களாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து, நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது அந்தியூர். இங்கே 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு, அந்தியூர் ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொறுமை இழந்த பொதுமக்கள் இன்று காலை பொள்ளாச்சி உடுமலை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100-க்கும் அதிகமானோர் காலி குடங்களுடன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.