கோவை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் மயில் அடிபட்டு இறந்ததில் 50 வீடுகளில் மின் சாதனங்கள் பழுது!

கோவை: கோவை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் மயில் அடிபட்டு இறந்ததில் 50 வீடுகளில் மின் சாதனங்கள் பழுதடைந்தன.


கோவை: கோவை அருகே மின்சார டிரான்ஸ்பார்மரில் மயில் அடிபட்டு இறந்ததில் 50 வீடுகளில் மின் சாதனங்கள் பழுதடைந்தன.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள புதுப்புதூர் தேவையாம் பாளையம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருகே உள்ளன. இதனால் வனப்பகுதிகளில் இருந்து மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வாழ்வினங்கள் ஊருக்குள் வருவது வழக்கம். நேற்று மாலை 5 மணி அளவில் ஆண் மயில் ஒன்று கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட மாணிக்கவாசகர் நகர் பகுதிக்கு வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு அதே இடத்தில் இறந்து விட்டது. டிரான்ஸ்பார்மரில் மயில் மோதியதால் டிரான்ஸ்பார்மர் வெடித்தது. அப்போது மாணிக்கவாசகர் நகர் பகுதியில் உள்ள 50 வீடுகளில் யுபிஎஸ் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின.

இதுகுறித்து உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை சரி செய்தனர். உயிரிழந்த மயில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறையான பிரேத பரிசோதனைக்கு பின் மயிலை அடக்கம் செய்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...