பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பொள்ளாச்சி நகராட்சியில் 30 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 16 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சுத்தமாக கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல். மாஸ்க் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும்படி சுகாதாரத் துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர்.