வால்பாறை: வால்பாறையில் ஒரே நாளில் 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை: வால்பாறையில் ஒரே நாளில் 12 நபர்களுக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. வால்பாறை நடுமலை ஐயர்பாடி சிறுகுன்றா, இஞ்சிப்பாறை, ஹைபோர்ஸ்ட், சேகள் முடி போன்ற பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
இன்று ஒரே நாளில் மட்டும் 12 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் கோவையில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், வெளியூர் நபர்கள் கொரோனா தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.