கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மருத்துவ முகாம்‌ நடைபெறும்‌ இடங்கள்‌, கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மருத்துவ முகாம்‌ நடைபெறும்‌ இடங்கள்‌, கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகள்‌ மற்றும்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.



அதன்‌ தொடர்ச்சியாக இன்று (27.04.2021) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.68 போலீஸ்‌ கந்தசாமி சாலையில்‌ நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, அப்பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ அனைவரும்‌ கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவித்தார்.



பின்னர், உப்பிலிபாளையம்‌ நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்‌ பணிகளையும்‌, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணிகளையும்‌ பார்வையிட்ட பின்னர், ஒண்டிப்புதூர்‌ வார்டு எண்‌.60, செந்தில்‌ ஜனதா நகர்‌ மற்றும்‌ வார்டு எண்‌.59 கண்ணன்‌ நகரில்‌ தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.



அதனை தொடர்ந்து, ஒண்டிபுதூர்‌ சுங்கம்‌ பகுதியில்‌ செயல்பட்டு வந்த தனியார்‌ பேக்கரியில்‌ அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல்‌ செயல்பட்டதற்காக அக்கடையை மூட உத்தரவிட்டார்.

பின்னர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சி, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக கொரோனா மருத்துவ பரிசோதனை அதிகமாக செய்யப்படுவது, நோய்‌ அறிகுறி உள்ள நபர்களை மருத்துவமனை, கோவிட்‌ கேர் சென்டர்‌ அல்லது அவர்களை தனிமைப்படுத்தப்படுவது, ஒவ்வொரு தெருக்களிலும்‌ மூன்று வீடுகளுக்கு மேல்‌ கொரோனா நோய்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ இருந்தால்‌ அந்த தெருக்களை தனிமைப்படுத்தப்பட்ட இடமாக வைத்து நோய்‌ பரவுதலை கட்டுப்படுத்துவது, பொது மக்கள்‌ கூட்டம்‌ கூடுவதை தவர்த்து அவசியமில்லாமல்‌ வெளியே வருவதை குறைப்பது, நோய்‌ பரவுதலை தடுப்பதற்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள்‌ சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவது, கபசுர குடிநீர்‌ பருகுவது, மல்டி விட்டமின்‌ மாத்திரைகளை உட்கொள்ள செய்வது, அடிக்கடி கைகளை சோப்புபோட்டு கழுவச் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. குடும்ப நபர்களில்‌ யாருக்கேனும்‌ கொரோனா நோய்‌ அறிகுறி இருப்பின்‌ உடனடியாக மருத்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்‌, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்‌ கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, மாநகராட்சியில்‌ உள்ள 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ 15 வாகனங்கள்‌ மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரம்‌ கொரோனா நோய்‌ தடுப்பூசி செலுத்தப்படுவது போன்ற நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு வருகிறது. மேலும்‌, இதனை 8 ஆயிரம்‌ வரை உயர்த்தப்படுவதே இதன்‌ இலக்காகும்‌.

மேலும்‌, அரசு நடவடிக்கைகளின்படி மருத்துவமனைகளில்‌ போதிய படுக்கை வசதிகள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலிருந்து வரும்‌ நபர்கள்‌ தங்களைத்‌ தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்‌. கூட்ட நெரிசல்களைத் தவிர்க்க வேண்டும்‌, அரசின்‌ சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்‌ போது, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முருகன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌, செவிலியர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...