உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறப்பு... தண்ணீர் மாசுதான் காரணம்... மக்கள் குற்றச்சாட்டு..!

கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து வருகிறது. மீன்கள் இறப்புக்கு தண்ணீர் மாசுதான் காரணமென்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்து வருகிறது. மீன்கள் இறப்புக்கு தண்ணீர் மாசுதான் காரணமென்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலால் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.



இதனிடையே உக்கடம் பெரியகுளத்தில் மீன்கள் இறந்து மிதந்து வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் தூர்நாற்றம் வீசுகிறது.



தண்ணீர் மாசு அடைந்ததுவிட்டதால்தான் மீன்கள் இறந்துள்ளன என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘உக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர சாக்கடை தண்ணீர் கலக்காமல் இருக்க சுத்திகரிப்பு உபகரணங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எனவே, தண்ணீர் மாசு அடைவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் இறந்து இருக்கலாம். தற்போது இறந்த மீன்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.’’ என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...