வால்பாறை: வால்பாறையில் திடீரெனப் பொழிந்த வான் மழையால், கடுமையான வெப்பத்தில் அவதிப்பட்டுவந்த மக்கள் மனம் நிறைந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

வால்பாறையில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான கோடை வெயிலால் அளவுக்கதிமான வெப்பம் நிலவிவந்தது. இதனால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை காலத்து மழை பெய்யாத காரணத்தினால் ஆறுகள் ஓடைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகின்றன. தேயிலை தோட்டங்ளில் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன.

இந்தநிலையில், இன்று மதியம் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் கோடை வெப்பம் தணிந்து மிதமான பருவநிலை நிலவுகிறது இதன் காரணமாக வால்பாறை பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஒரு சில தினங்களுக்கு மழை பெய்தால், கவாத்து செய்யப்பட்ட தேயிலைச் செடிகளின் வளர்ச்சி பெருகி உற்பத்தி அதிகரிப்பதோடு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.